/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் சாரல் விழாவிற்கு தண்ணீர் திறக்க கலெக்டர் உத்தரவு
/
சுருளி அருவியில் சாரல் விழாவிற்கு தண்ணீர் திறக்க கலெக்டர் உத்தரவு
சுருளி அருவியில் சாரல் விழாவிற்கு தண்ணீர் திறக்க கலெக்டர் உத்தரவு
சுருளி அருவியில் சாரல் விழாவிற்கு தண்ணீர் திறக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 28, 2024 05:28 AM
கம்பம், : சுருளி அருவியில் இன்று ( செப். 28 ) துவங்க உள்ள சாரல் விழாவிற்காக ஹைவேவிஸ் வியர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.ஆண்டு தோறும் சுருளி அருவியில் சாரல் விழா நடைபெறுகிறது. இந்தாண்டு இன்று காலை அருவி நுழைவு வாயிலில் விழா துவங்குகிறது. கடந்தாண்டு அக்.,முதல் வாரம் நடந்த சாரல் விழாவின் போது அருவியில் தண்ணீர் கொட்டியது. ஆனால் தற்போது மழை பெய்யாததால், அருவியில் நீர் வரத்து முற்றிலும் நின்று விடும் நிலையில் உள்ளது. எனவே,
சாரல் விழாவை முன்னிட்டு அருவியில் தண்ணீர் திறந்து விட மின்வாரிய அதிகாரிகளை கலெக்டர் ஷஜீவனா கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து மழை இல்லாததாலும், வெயில் கடுமையாக இருப்பதால் ஹைவேவிஸ் அணையில் நீர் மட்டம் குறைந்துள்ளது. அணையில் உள்ள நீரை வைத்து சுருளியாறு நீர் மின் நிலையத்தில் தேவைக்கேற்ப மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ள நிலையில் சாரல் விழாவிற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி வாரிய அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். மின் வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, அணைகளில் நீர் மட்டம் மிக குறைவாக இருந்த போதும் கலெக்டரின் உத்தரவினை தொடர்ந்து ஹைவேவிஸ் வியர் அணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று காலை சுருளி அருவிக்கு வரும் என்றனர்.