ADDED : பிப் 10, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் தாலுகா, அய்யம்பட்டி வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிப்.,18 ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.
கிராம கமிட்டித் தலைவர் அண்ணாத்துரை தலைமையிலான நிர்வாகிகள் கலெக்டரிடம் போட்டி ஏற்பாடுகள் மேற்கொள்ள மனு அளித்தனர்.
ஜல்லிக்கட்டில் வீரர்கள், காளைகள் பதிவு பிப்., 12ல் துவங்க உள்ளது.
இந் நிலையில் நேற்று போட்டி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத் ஆகியோர் அய்யம்பட்டியில் நேரில் ஆய்வு செய்தனர். உடன் கிராம கமிட்டி நிர்வாகிகள், போலீஸ அதிகாரிகள் உடனிருந்தனர்.