UPDATED : நவ 27, 2026 12:30 AM
ADDED : நவ 27, 2026 12:30 AM
அ நிறம் | அளவு
தேனி: கட்டடம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.
அமைப்பு தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். மனுவில் ‘பென்ஷன் திட்டம், விபத்து கால காப்பீடு, வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு கட்டி கொடுத்தல், துாய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்,’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடன் சென்றனர்.
