/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பை கொட்டும் இடமாக மாறும் கலெக்டர் அலுவலக வளாகம்
/
குப்பை கொட்டும் இடமாக மாறும் கலெக்டர் அலுவலக வளாகம்
குப்பை கொட்டும் இடமாக மாறும் கலெக்டர் அலுவலக வளாகம்
குப்பை கொட்டும் இடமாக மாறும் கலெக்டர் அலுவலக வளாகம்
ADDED : பிப் 10, 2025 05:12 AM

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் அலுவலகம் மேடான பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு செல்லும் ரோட்டில் ஒரு பகுதியில் புதிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பகுதியில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இப்பகுதியில் குப்பை கொட்டி வருவது அதிகரித்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள குழாயில் இருந்து வரும் கழிவு நீர் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
இப்பகுதியை சுத்தம் செய்யவும், இப்பகுதியில் கொட்டப்படும் குப்பையை மறு சுழற்சி செய்து வளாகத்தை சுகாதாரம் உள்ள வளாகமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.