/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அங்கக வேளாண் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

ADDED : ஆக 14, 2025 02:49 AM
தேனி: அங்கக வேளாண் மூலம் சாகுபடி செய்த பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வீரபாண்டியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேசினார்.
வீரபாண்டியில் வேளாண்துறை சார்பில் அங்கக வேளாண் சாகுபடி கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'விவசாயிகள் 30 ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தினர். இன்று வேதிபொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதனால் பலரும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தாத காய்கறிகள், உணவுகளை அதிகம் விரும்புகின்றனர். அதன் தேவையும் அதிகரித்துள்ளது. நமது மாவட்டம் அங்கக வேளாண் சாகுபடிக்கு உகந்தது, மேலும் அங்கக வேளாண் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என்றார். வேளாண் இணைஇயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தார். துணை இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கருத்தரங்கு, கண்காட்சியை ஒருங்கிணைத்தனர். விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.