ADDED : பிப் 22, 2024 06:10 AM
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பபன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு வரவேற்றார். மேஜர் தயான்சந்த் விருது பெற்ற, இந்திய பெண்கள் கபடி அணி பயிற்சியாளர் கவிதா பேசினார். கல்லுாரி இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், முதல்வர் சித்ரா, உறவின்முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவஸ்தான செயலாளர்கள் ராமர்பாண்டியன், சுப்புராம், வேதியியல் துறைத் தலைவர் தேவிமீனாட்சி பேசினர். மாணவிகளுக்கு 400 மீ., 800 மீ., குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், செஸ், ஹேண்ட் பால், டென்னிஸ், எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலைகளை செய்து காட்டினர். கல்லுாரி துணை முதல்வர் கோமதி நன்றி தெரிவித்தார்.