ADDED : மார் 15, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி சி.பி.ஏ., கல்லுாரியில் 50 வது ஆண்டு விளையாட்டு விழா கல்லுாரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
செயலாளர் புருஷோத்தமன். முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாலமுருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலநாதன், நந்தகுமாரன் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர் சொரூபன் விழாவினை துவக்கி வைத்தார். பேராசிரியர் சிவப்பிரகாசம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.  உடற்கல்வி இயக்குனர் சிவா வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், ஈட்டி, குண்டு எரிதல். நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.  வெற்றி பெற்றவர்களுக்கு போடி டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

