/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் குத்துச் சண்டை போட்டி கல்லூரி மாணவர் சாதனை
/
தொடர் குத்துச் சண்டை போட்டி கல்லூரி மாணவர் சாதனை
ADDED : ஜூலை 13, 2025 12:29 AM

உத்தமபாளையம்: சென்னையில் நடைபெற்ற உலக சாதனை குத்துச் சண்டை போட்டியில் உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவர் தொடர்ந்து இரண்டு மணி நேரம் குத்து சண்டையிட்டு உலக சாதனை படைத்தார்.
சென்னை ஏ.ஜே.எஸ். நிதி உயர்நிலைப்பள்ளியில் சாதனையாளர்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் 'ஸ்டார் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' இணைந்து உலக சாதனை குத்து சண்டை போட்டிகளை நடத்தியது. இதில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர் சிவேஷ் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக தனி குத்து சண்டை செய்து உலக சாதனை செய்தார்.
அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சாதனை மாணவரை கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் , ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச். முகமது மீரான் , உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.