/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வணிக வரி அதிகாரிக்கு சிறை வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
/
வணிக வரி அதிகாரிக்கு சிறை வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
வணிக வரி அதிகாரிக்கு சிறை வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
வணிக வரி அதிகாரிக்கு சிறை வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
ADDED : நவ 15, 2025 01:35 AM
தேனி: போடியில் லஞ்சம் பெற்ற மதுரை மண்டல வணிக வரித்துறை அதிகாரிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் ஜெயராஜ், 63; ஏலக்காய் வியாபாரி. இவர், 2013ல் ஏல உரிமம் பெறுவதற்காக போடி வணிக வரித்துறையில் விண்ணப்பித்தார். உதவி ஆய்வாளர் செல்லையா, 59, என்பவர், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதை வழங்க விரும்பாத ஏல வியாபாரி, தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் செல்லையாவை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் பெற்ற செல்லையா, தற்போது மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலக உதவி ஆய்வாளராக உள்ளார்.
தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், செல்லையாவுக்கு, மூன்றாண்டுகள் சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.