இடிந்து விழும் கூரையால் பயணிகள், வியாபாரிகள் அச்சம்
இடிந்து விழும் கூரையால் பயணிகள், வியாபாரிகள் அச்சம்
UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 11:42 PM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் இடிந்து விழும் கூரையால் பயணிகள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டடம் 27 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார நடைபாதை, கடைகளில் கூரை கடந்த சில ஆண்டுகளாக பெயர்ந்து விழுந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி மேற்கொள்ள நகராட்சி தீர்மானம் நிறைவேற்றினாலும் தொடர் நடவடிக்கை இல்லை. கடந்த சில வாரங்களாக நடைபாதையில் மட்டுமின்றி கடைகளின் உட்பகுதியிலும் கூரைகள் பெயர்ந்து விழுவது அதிகரித்து உள்ளது. இதனால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள், கடை நடத்துவோர் அச்சத்துடன் உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
