/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி
/
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி
ADDED : நவ 13, 2024 11:57 PM
தேனி; அரசின் போட்டித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தாட்கோ சார்பில், இடைநிலை பட்டய கணக்காளர் நிறுவன செயலாளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற, சென்னையில் முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு 100 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பயிற்சி பெற விரும்புவோர் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்கும் வசதி, உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
கூடுதல் விபரங்களுக்குமாவட்ட மேலாளர், கலெக்டர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு நேரிலோ, 04546 260 995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

