/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்க வேண்டும்
/
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்க வேண்டும்
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்க வேண்டும்
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்க வேண்டும்
ADDED : நவ 26, 2025 03:36 AM
தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்கள் வழங்க வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்த பணிகள் நவ., 4ல் துவங்கியது. இப்பணி டிச.,4ல் முடிவடைகிறது. இதற்காக வாக்காளர்களுக்கு அவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண், பெயர் அச்சிடப்பட்ட தலா இரு படிவங்கள் பி.எல்.ஓ.,க்கள் மூலம் வழங்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன. படிவத்தில் வாக்காளர் விவரங்கள், அவர்கள் 2002 தேர்தலில் ஓட்டளித்திருந்தால் எந்த தொகுதி, பாகத்தில் இடம்பெற்றிருந்தனர் என்ற விவரம், வாக்களிக்கவில்லை எனில் அவர்கள் உறவினர்கள் 2002ல் வாக்களித்திருந்தால் அவர்கள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதனை பூர்த்தி செய்து இதுவரை சுமார் 50 சதவீத்திற்கும் அதிகமானவர்கள் வழங்கி உள்ளனர். மீதமுள்ளவர்கள் வழங்காமல் உள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'படிவங்களை பூர்த்தி செய்து வழங்காதவர்கள் விரைவில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். படிவங்களை வழங்க டிச.,4 வரை காத்திருக்க வேண்டாம். முன்னதாகவே வழங்கி பி.எல்.ஓ.,க்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.

