/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள் காமராஜபுரம், இந்திரா காலனியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
/
சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள் காமராஜபுரம், இந்திரா காலனியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள் காமராஜபுரம், இந்திரா காலனியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள் காமராஜபுரம், இந்திரா காலனியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
ADDED : அக் 28, 2025 04:14 AM

போடி: போடி அருகே காமராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி செல்லும் மெயின் ரோடு குண்டும், குழியுமாகவும், சேதமடைந்து தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில்உள்ளன.
தெருக்களில் சாக்கடை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், காமராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கா புரம் ஆறாவது வார்டில் அமைந்து உள்ளது இந்திரா காலனி. இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்புகள் உரிய பராமரிப்பு இல்லாததால் பல வீடுகள் சேதம் அடைந்து கட்டடம் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மழைக் காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து சிரமம் அடைகின்றனர். மாணிக்காபுரம் மெயின் ரோடு சீரமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலானதால் குண்டும், குழியுமாக உள்ளன.
அடிப்படை வசதி கோரி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சியில் நடவடிக்கை இல்லை. இது குறித்து மக்கள் கூறியதாவது:
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் ஐயப்பன், மாணிக்காபுரம் இந்திரா காலனியில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இரவில் தெருக்கள் இருளில் மூழ்கி பெண்கள் வெளியே வர அச்சம் அடைகின்றனர்.
ஒரு கி.மீ., தூரத்தில் உப்புக்கோட்டை முல்லை ஆறு இருந்தும், இப் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் இல்லை. பல ஆண்டுகளாக போர்வெல் நீர் குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுத்தப்படுத்தி இரண்டு ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை. சுகாதாரமற்ற போர்வெல் நீரையே குடிநீராக பருகும் நிலை உள்ளது.
மேல்நிலை தொட்டியின் மேல் பகுதியும், கீழே உள்ள பில்லர்களும் சேதம் அடைந்து உள்ளது.
குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த தொகுப்பு வீடுகள் செல்வகுமார், மாணிக்காபுரம்: மாணிக்காபுரம்- - உப்புக்கோட்டை ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. சேதமைடைந்த ரோட்டில் வாகனங்களும், மக்களும் நடந்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.
முதலா வது, மூன்றாவது தெருக்களில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன்பாக தேக்கமாக உள்ளது.
மழைக் காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. உரிய பராமரிப்பு இன்றி பல வீடுகளில் கட்டடம் விரிசல் ஏற்பட்டு, வீட்டின் மேல் தளம் கான்கிரீட் கம்பிகள் தெரியும் வகையில் சேதம் அடைந்து உள்ளன.
கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அச்சத்துடன் குடியிருக்கிறோம். முதலாவது தெருவில் ரேஷன் கடை சேதம் அடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது.
சேதம் அடைந்த ரேஷன் கடை, தொகுப்பு வீடுகளை சீரமைக்கவும், தெருக்களில் சாக்கடை, ரோடு வசதி ஏற்படுத்தி தர காமராஜபுரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

