ADDED : பிப் 01, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் நகராட்சி கமிஷனர் மீனா, சுகாதார ஆய்வாளர் அசன்முகமது தலைமையில் டீக்கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள், காய்கறி கடைகளில் பாலித்தீன் பைகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10 கிலோ பாலித்தீன் பைகள் கைபற்றப்பட்டு, 5 கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. முதல் எச்சரிக்கை விடப்பட்டது. பாலித்தீன் பயன்பாடு தொடரும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.