/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி உறுப்பினரை கைது செய்ய காங்கிரஸ் முற்றுகை போராட்டம்
/
ஊராட்சி உறுப்பினரை கைது செய்ய காங்கிரஸ் முற்றுகை போராட்டம்
ஊராட்சி உறுப்பினரை கைது செய்ய காங்கிரஸ் முற்றுகை போராட்டம்
ஊராட்சி உறுப்பினரை கைது செய்ய காங்கிரஸ் முற்றுகை போராட்டம்
ADDED : ஆக 03, 2025 04:05 AM

மூணாறு : போலி ஆவணங்கள் மூலம் வீடு கட்டும் நிதியை மோசடி செய்ய முயன்ற ஊராட்சி உறுப்பினரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் ' லைப் மிஷன்' எனும் திட்டம் மூலம் வீட்டு மனை வாங்கவும், வீடு கட்டவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அத்திட்டத்தை ஊராட்சிகள் மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. மூணாறு ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் நிதியை மோசடி செய்ய முயன்றார். இது தொடர்பாக ஊராட்சி உறுப்பினர் உட்பட இருவர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவான இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி உறுப்பினரை கைது செய்யுமாறு வலியுறுத்தி காங்கிரஸ் மண்டல குழு தலைமையில் நேற்று மூணாறு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
காங்கிரஸ் மண்டல தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.மணி துவக்கி வைத்தார். காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, நிர்வாக குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ஜெயராஜ், ஒன்றிய தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் நல்லமுத்து, ஊராட்சி துணைத்தலைவர் மார்ஸ் பீட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.