/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு சீரமைக்ககோரி காங்., நூதன போராட்டம்
/
ரோடு சீரமைக்ககோரி காங்., நூதன போராட்டம்
ADDED : அக் 20, 2024 07:12 AM

மூணாறு : சேதமடைந்த ரோட்டை சீரமைக்குமாறு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் அங்கபிரதட்சணம் செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
மூணாறு, மாங்குளம் ரோட்டில் பழைய மூணாறு முதல் லெட்சுமி எஸ்டேட் வரை ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்பட தினமும் நூற்றுக் கணக்கில் சென்று வருகின்றன. குண்டும், குழியுமான ரோட்டில் மழை நீர் தேங்கி விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. ரோட்டை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ரோட்டை சீரமைக்குமாறு வலியுறுத்தி காங்கிரஸ் மண்டல குழு தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். குண்டும், குழியுமான ரோட்டில் நேற்று சேறு, சகதியை பொருட்படுத்தாமல் அங்கபிரதட்சணம் செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.மணி துவக்கி வைத்தார். காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், ஊராட்சி தலைவர் தீபாராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.