/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் செங்கல் விலை உயர்வு கட்டுமான நிறுவனங்கள் புலம்பல்
/
கம்பத்தில் செங்கல் விலை உயர்வு கட்டுமான நிறுவனங்கள் புலம்பல்
கம்பத்தில் செங்கல் விலை உயர்வு கட்டுமான நிறுவனங்கள் புலம்பல்
கம்பத்தில் செங்கல் விலை உயர்வு கட்டுமான நிறுவனங்கள் புலம்பல்
ADDED : ஆக 20, 2025 07:22 AM
கம்பம் : செங்கல் விலை அதிகரித்து வருவதால் ஒப்பந்தகாரர்கள், கட்டுமான நிறுவனங்கள் புலம்புகின்றனர்.
கட்டுமான பொருள்களான சிமென்ட் , செங்கல், மணல், ஜல்லி கற்கள், எம். சாண்ட், இரும்பு கம்பி என அனைத்து பொருள்களும் விலை உயர்ந்துள்ளன. செங்கல் நீண்ட காலமாக விலை உயர்வு இன்றி இருந்தது. ஆயிரம் செங்கல் ரூ.6 ஆயிரம் வரை இருந்தது. தற்போது ஆயிரம் செங்கல் ரூ.6,500ல் இருந்து ரூ.7 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதில் சேம்பர் செங்கல் மற்றும் மிஷின் செங்கல் என்றால் ரூ.9 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், வீடு கட்டுபவர்களும் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து செங்கல் காளவாசல் உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில் , 'கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தியை காளவாசல் உரிமையாளர்கள் குறைந்துள்ளனர். உற்பத்தி குறைந்துள்ளதால், தற்போதுதேவை அதிகரித்துள்ளது. எனவே விலை உயரத் துவங்கியுள்ளது,'என்றார்.