/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி ஆமை வேகம்: ஆறு மாதமாக நடந்தும் அஸ்திவாரம் கூட முடியல

ADDED : ஏப் 19, 2024 05:45 AM
தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது குமுளி, இங்குள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது. அதேவேளையில் தமிழக பஸ் ஸ்டாப் எவ்வித அடிப்படை வசதியில்லாமல் பஸ்கள் திருப்புவதற்கு கூட இடவசதியின்றி காணப்பட்டது. சபரிமலை சீசனில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக முதல்வர் ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். ஆனால் கட்டுமான பணியை யார் செய்வது என்பதில் கூடலுார் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை, வனத்துறையினரிடைய பிரச்னை இருந்தது. இறுதியாக போக்குவரத்து துறை சார்பில் ரூ.5.50 கோடி திட்ட மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு 2023 செப். 11ல் பூமி பூஜை நடத்தப்பட்டது.
துவக்கத்தில் இப்பணி வேகம் எடுத்தது. கடந்த சில மாதங்களாக முழுமையாக பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில்மீண்டும் இப்பணி துவங்கிய போதிலும் தீவிரம் காட்டாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது.
6 மாதத்திற்கு மேலாகியும் அஸ்திவார பணிகூட இன்னும் முடியவில்லை. வரும் சபரிமலை சீசனுக்கு முன் இப்பணி முடிவடைந்து புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.