நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் உள்ள ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ராமராஜ் வழி நடத்தினார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச.22ல் நடக்கும் பாரதமாதா தேர் பவனியை சிறப்பாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.