நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு, நாயக்கர் அசோசியேஷன், அனைத்து தெலுங்கர்கள் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் ஜம்புலிபுத்துார் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கட்டபொம்மன் பேரவை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கவிதாலயா கல்வி அறக்கட்டளை நிர்வாகி சரவணன் முன்னிலை வகித்தார். நாயுடு, நாயக்கர் சமுதாயங்களை ஒருங்கிணைப்பு செய்வது உட்பட கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கர் அசோசியேஷன் மாநில துணைத் தலைவர் தங்கபாண்டி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.