தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தொடரும் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் அவதி

தொடரும் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் அவதி

தொடரும் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் அவதி


UPDATED : நவ 16, 2026 04:33 PM

ADDED : நவ 16, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 04:33 PM ADDED : நவ 16, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாடு தொடர்வதால் புதிய இணைப்பு பெறுபவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய மின் இணைப்பு பெற பொதுமக்கள் மின்வாரியத்திற்கு பணம் செலுத்தி , மீட்டர் இல்லாததால் இணைப்பு பெற முடியாத நிலை பல ஆண்டுகளாக உள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 100 மீட்டர்கள் தருவார்கள். ஆனால் புதிய இணைப்பிற்கு பணம் செலுத்தி காத்திருப்பவர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். இதனால் தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் புலம்பி வருகின்றனர்.

வேறு வழியின்றி கடந்த தி.மு.க. ஆட்சியில் மீட்டர்களை தனியார் கடைகளில் க்கள் வாங்கி கொள்ள அனுமதி வழங்கி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும் மீட்டர் வாங்குவது குறித்து தெளிவான உத்தரவு பிறப்பிக்க வில்லை. இதனால் பழைய நிலையே தொடர்கிறது.

இது குறித்து மின்வாரியத்தினர் கூறுகையில், ‘ஒவ்வொரு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறைந்தது 500 பேர் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற காத்திருக்கின்றனர். பலர் இணைப்பு வாங்கியும் மீட்டர் இல்லாததால் மின்சாரம் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். மீட்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.’ என்றனர். புதிய இணைப்பு கோரி பணம் செலுத்தியவர்களுக்கு குறைந்தது ஒரு மாதம் கழித்து தான் மீட்டர் வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்ற வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us