தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணையில் தொடர்மழை நீர்வரத்து 2400 கன அடியை தாண்டியது

பெரியாறு அணையில் தொடர்மழை நீர்வரத்து 2400 கன அடியை தாண்டியது

பெரியாறு அணையில் தொடர்மழை நீர்வரத்து 2400 கன அடியை தாண்டியது


ADDED : அக் 22, 2026 05:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2488 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 தினங்களாக தொடர் மழை பெய்கிறது. இன்று (அக்.,22) காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 31.2 மி.மீ., தேக்கடியில் 53.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 2488 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 117.90 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2249 மில்லியன் கன அடி. இன்றும் (அக்.,22) நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்ததால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டிய தண்ணீர், இரண்டு மாதத்திற்கு பின் ஆக.8ல் திறக்கப்பட்டது. இருந்த போதிலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் முதல் போக நெல் சாகுபடியை கூட முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us