/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழை திராட்சையில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல்
/
தொடர் மழை திராட்சையில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல்
தொடர் மழை திராட்சையில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல்
தொடர் மழை திராட்சையில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல்
ADDED : அக் 18, 2025 04:23 AM
கம்பம்: தொடர் மழை, சூரிய வெளிச்சம் இல்லாதது, காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் திராட்சை கொடிகளில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பன்னீர் திராட்ைச சாகுபடி பிரதானமாகும். கம்பம் பள்ளத்துக்கில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது.
ஆண்டிற்கு 3 அறுவடை என்பதால் தொடர்ந்து திராட்சை கிடைக்கும். அதிக பனி, மழை, மேகமூட்டம் போன்ற சீதோஷ்ண நிலைகளில் திராட்சையில் அடிச் சாம்பல் நோய் தாக்கும். இலைகளில் வெண் புள்ளிகள் தோன்றும். உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இலைகள், பூக்கள் கருகி,மகசூல் பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக மழை காலங்களிலும், பனி காலங்களிலும் இந்த நோய் தாக்குதல் இருக்கும். தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை வருவதாலும், மேகமூட்டமாக சூரிய ஒளி இல்லாமல் இருப்பதாலும் நோய் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ' இந்த சீதோஷ்ணநிலை மழை காரணமாக திராட்சை விலையும் குறைந்துள்ளது. கொடியில் அடிச் சாம்பல் நோய் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது. இதை தடுக்க பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்க துவங்கி உள்ளோம்,' என்றனர்.