/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழை: சண்முகாநதி அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 27, 2024 04:05 AM

கம்பம் : சண்முகா நதி அணையின் நீர் மட்டம் 51.5 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகா நதி அணை மொத்த கொள்ளளவு 52.5 அடியாகும். இதில் 26.5 அடி வரை பாசனத்திற்கு நீரை பயன்படுத்தலாம்.
அணை நீர்மட்டம் 26 அடியாக குறையும் போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இந்த அணையின் நீர் நேரடி பாசனத்திற்கு பயன்படாது. குளங்கள், கண்மாய்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும். வடகிழக்கு பருவ மழை காலங்களில் அணை நீர்மட்டம் உயரும்.
அணை நீரால் ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஒவுலாபுரம், கன்னி சேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார், வெள்ளையம்மாள்புரம் , ஓடைப்பட்டி வரை உள்ள 1440 ஏக்கர் நிலங்கள் பயன்படும். ஆண்டுதோறும் நவ., தண்ணீர் திறக்கப்படும். விநாடிக்கு 14.47 கன அடி வீதம் 3 மாதங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும். தற்போது மேகமலையில் பெய்து வரும் கன மழை காரணமாக அக் . 20 ல், 45.30 அடியாக இருந்த நீர்மட்டம் அக் . 21 ல் 3 கனஅடி நீர் வரத்து துவங்கியது. தொடர்ந்து அக்.. 22ல் 3 , அக். 23 ல் 6 கன அடி, அக். 24 ல் 51 கன அடி, அக். 25 ல் 132 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. இதனால் அணை நீர்மட்டம் 45.30 அடியிலிருந்து 51. 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்னமும் ஒரு அடி மட்டுமே முழு கொள்ளவை எட்ட தேவைப்படுகிறது. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.