/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் தொடர் மழை நீர்மட்டம் 126 அடியை எட்டியது நீர் திறப்பு 1350 கன அடியாக அதிகரிப்பு
/
பெரியாறு அணையில் தொடர் மழை நீர்மட்டம் 126 அடியை எட்டியது நீர் திறப்பு 1350 கன அடியாக அதிகரிப்பு
பெரியாறு அணையில் தொடர் மழை நீர்மட்டம் 126 அடியை எட்டியது நீர் திறப்பு 1350 கன அடியாக அதிகரிப்பு
பெரியாறு அணையில் தொடர் மழை நீர்மட்டம் 126 அடியை எட்டியது நீர் திறப்பு 1350 கன அடியாக அதிகரிப்பு
ADDED : மே 30, 2025 01:37 AM

கூடலுார்:முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் 126 அடியை எட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழக பகுதிக்கு நீர் திறப்பு 1350 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பெரியாறில் 112.4 மி.மீ., தேக்கடியில் 51.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நேற்று மாலை 126 அடியை எட்டியதுமொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7318 கன அடியாக இருந்தது.
நீர் இருப்பு 3568 மில்லியன் கன அடியாகும். மே 24ல் 114.65 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த ஐந்து நாட்களில் 12 அடிவரை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர் திறப்பு அதிகரிப்பு
அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாலும் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை 6:00 மணிக்கு 100 கன அடியில் இருந்து வினாடிக்கு 1350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மின் உற்பத்தி துவக்கம்
கடந்த மூன்று மாதங்களாக லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அணையிலிருந்து தமிழகத்திற்கு 1350 கன அடி நீர் திறக்கப்பட்டதால் மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் 121 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.
எச்சரிக்கை
அணையில் நீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 1350 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்பில் துவங்கும் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குமுளி, கூடலுார், கம்பம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.