/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
6 மாதமாக பணம் கிடைக்காமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு தேசிய ஊரக வேலை திட்ட நிதி இன்றி அவதி
/
6 மாதமாக பணம் கிடைக்காமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு தேசிய ஊரக வேலை திட்ட நிதி இன்றி அவதி
6 மாதமாக பணம் கிடைக்காமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு தேசிய ஊரக வேலை திட்ட நிதி இன்றி அவதி
6 மாதமாக பணம் கிடைக்காமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு தேசிய ஊரக வேலை திட்ட நிதி இன்றி அவதி
ADDED : ஜன 22, 2025 09:24 AM
ஆண்டிபட்டி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டுமான பணிகள் முடித்த கான்ட்ராக்டர்கள் 6 மாதமாக பணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 30 கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிமென்ட் ரோடு, கழிவுநீர் வடிகால் கட்டுதல், பேவர்பிளாக் பதித்தல், சிறுபாலம், சத்துணவுக்கூடம், அங்கன்வாடி மையம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு தேவையான செங்கல், ஜல்லிகற்கள், சிமென்ட், கம்பி ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் சப்ளை செய்து பணிகளை முடித்துள்ளனர்.
பணிகள் முடிந்து அதற்கான அறிக்கை சமர்ப்பித்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அரசு அதற்கான பணம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு கான்ட்ராக்டருக்கும் பல லட்சம் ரூபாய் நிலுவையில் இருப்பதால் தொடர்ந்து பணிகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
கான்ட்ராக்டர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் 8 ஒன்றியங்களுக்குட்பட்ட 130 கிராம ஊராட்சிகளிலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாவட்ட அளவில் ரூ.10 கோடி வரை நிலுவையாக உள்ளது. அரசு மூலம் பணத்தை எதிர்பார்த்து கான்ட்ராக்டர்கள் தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
அரசு மூலம் நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தொடர்ந்து பதில் தெரிவிக்கின்றனர். பணம் நிலுவையால் வட்டி நஷ்டம் ஏற்படுவதுடன் அடுத்தடுத்த பணிகளை தொடரவும் சிக்கல் ஏற்படுகிறது.
இவ்வாறு கூறினர்.