/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு கூட்டம் நடத்த தவறினால் கவுன்சிலர்கள் ராஜினாமா

ADDED : ஜூலை 16, 2025 07:21 AM

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா (தி.மு.க.,) மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற சிறப்பு கூட்டம் கூட்ட செயல் அலுவலர் எட்வின் ஜோஸ்யிடம் 9 கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தற்போது தி.மு.க., 9, அ.தி.மு.க., 5, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1, வி.சி.க., 1 கவுன்சிலர்களாக உள்ளனர். 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமசாமி இறந்ததால் காலியாக உள்ளது.
பேரூராட்சி தலைவர் சந்திரகலா மற்ற கவுன்சிலர்களை மதிப்பதில்லை, எதிர்மறையான போக்குடன் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறி அவர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்த மனுவை ஜூலை 3ல் தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்தனர். 10 நாட்களாகியும் மனு மீது எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று தி.மு.க.,கவுன்சிலர்கள் ஜோதி, கஸ்துாரி லட்சுமி, சரவணன், பஞ்சு, அ.தி.மு.க., கலாவதி, ரேணுகா, மார்சிஸ்ட் கம்யூ., சின்னன், இந்திய கம்யூ., மீனாட்சி, வி.சி.க., முத்துராமன் ஆகிய 9 பேர் செயல் அலுவலரிடம் கூட்டம் நடத்த வலியுறுத்தி மனு அளித்தனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது: பேரூராட்சியில் உள்ள 17 கவுன்சிலர்களில் தற்போது 15 பேர் தலைவர் மீதான அதிருப்தியில் உள்ளனர். சிறப்பு கூட்டத்தை உடனே நடத்த வலியுறுத்தினோம். 2023ல் இதேபோன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஏற்பாடு செய்தோம். கட்சி மேலிடம், எம்.எல்.ஏ., மகாராஜன் ஆகியோர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதனை கைவிட்டோம். பேரூராட்சி தலைவர் எதிர்மறையான நடவடிக்கைகளை கண்டித்து மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இக் கூட்டம் நடத்த தவறினால் கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளோம் என்றனர்.