ADDED : செப் 25, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கடலார் எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனில் மேய்ச்சலுக்குச் சென்ற பசு புலியிடம் சிக்கி இறந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பால்துரையின் பசு செப்.22ல் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பசுவை கண்டு பிடிக்க இயலவில்லை.இந்நிலையில் அப்பகுதியில் தோட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமான மருத்துவமனை அருகே தேயிலை தோட்டத்தினுள் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்தது. புலியிடம் சிக்கி பசு இறந்ததாக தெரியவந்தது. அப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி பலியானது குறிப்பிடதக்கது.