/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் புலி தாக்கி பசு பலத்த காயம்
/
மூணாறில் புலி தாக்கி பசு பலத்த காயம்
ADDED : டிச 06, 2024 06:16 AM
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கிராம்ஸ் லாண்ட் எஸ்டேட்டில் புலி தாக்கியதில் பலத்த காயமடைந்த கறவை பசு உயிருக்கு போராடி வருகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த சாதமுக்குச் சொந்தமான கறவை பசு நேற்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றது.
தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவை திடீரென பாய்ந்து வந்த புலி தாக்கியது.
அதனை , அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் பலமாக கூச்சலிட்டனர். அந்த சப்தத்தை கேட்டு புலி பசுவை விட்டு, விட்டு தப்பி காட்டிற்குள் ஓடியது. பலத்த காயத்துடன் தப்பிய பசு உயிருக்கு போராடி வருகின்றது. கால்நடை டாக்டர் பசுவுக்கு சிகிச்சை அளித்த நிலையில், வனத்துறையினர் பசுவை பார்வையிட்டனர்.