/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் அக்.24ல் உண்ணாவிரதம் இணை ஒருங்கிணைப்பாளர் தகவல்

ADDED : அக் 16, 2024 02:12 AM
தேனி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 24ல் கலெக்டர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக சி.பி.எஸ்.,(பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால் அக்கட்சி ஆட்சிக்கு வந்து இதுவரை வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதே போல் சோம்நாத் கமிட்டி அறிக்கை அல்லது ஆந்திர ஓய்வூதிய திட்டம் இந்த இரண்டில் எது தமிழகத்திற்கு பொருத்தமானது என முதல்வரிடம் பேசி அறிவிப்போம் என 2023 ஜூலை 22ல் அப்போதைய நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை முடிவு அறிவிக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். எனவே சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அக்.,24ல் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஒருநாள் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம் என்றார்.