/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிரிக்கெட் : கே.ஆர்.சி.சி., அணி வெற்றி
/
கிரிக்கெட் : கே.ஆர்.சி.சி., அணி வெற்றி
ADDED : ஆக 24, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் முதல் டிவிஷன் லீக் போட்டிகள் நடந்து வருகின்றது. தேனியில் நடந்த போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி, காஸ்மோ சி.சி., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.ஆர்.சி.சி., அணி 31.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. ராஜேஷ் கண்ணன் 70 ரன்கள் எடுத்தார்.
எதிரணி வீரர் பாலமுருகன் 5 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த காஸ்மோ சி.சி., அணி 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டும் எடுத்தது, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எதிரணி வீரர் ஆசிஸ்ரகுமான் 5 விக்கெட் வீழ்த்தினார்.