ADDED : பிப் 13, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பம் கக்கன் காலணியை சேர்ந்தவர் மணிவண்ணன் 35, இவர் இங்குள்ள மின்வாரிய அலுவலக ரோட்டில் பன்றி இறைச்சி கடை நடந்தி வருகிறார்.
இவரது கடைக்கு சாமாண்டிபுரத்தை சேர்ந்த பாண்டி வழக்கமாக சாப்பிட வருவார். சாப்பிட்ட வகையில் பாக்கி வைத்துள்ளார். நேற்று முன்தினம் பாண்டி சாப்பிட வந்துள்ளார். பழைய பாக்கியை தருமாறு மணிவண்ணன் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிவண்ணனை வெட்டியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரக மருத்துவமனைக்கு அனுப்பி வைததனர். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.