ADDED : ஜூன் 13, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கம்பம் ராமஜெயம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கயல்விழி முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஆன்லைன் மூலம் நிதி மோசடிகள் எவ்வாறு நடக்கின்றன. அதில் பள்ளி மாணவ, மாணவிகள் எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கினார். தொழில்நுட்ப எஸ்.ஐ., அழகுபாண்டி பேசினார். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.