/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதிப்பு
/
குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதிப்பு
ADDED : டிச 14, 2024 02:38 AM

கூடலுார்:தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலத்திற்கும், பழைய போலீஸ் சோதனை சாவடிக்கும் இடையில் நேற்று காலை தேக்கு மற்றும் மூங்கில் மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்தன. அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.
சபரிமலை சீசன் காரணமாக அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே சென்று திரும்புகின்றன. மரங்கள் சாய்ந்த நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. வனத்துறையினரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் போலீசாருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

