ADDED : மார் 12, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சிக்கான குப்பை கிடங்கு சுடுகாடு பகுதியை அடுத்து ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது.
மலைபோல் குவிந்துள்ள குப்பை கிடங்கில் இரவில் தீ வைத்து செல்வதால் அப்பகுதியில் பரவும் புகையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கொண்ட மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குடியிருப்புகளில் இருப்பவர்கள் பாதிப்படைகின்றனர். குப்பையில் அடிக்கடி எரியும் தீயை கட்டுப்படுத்தவும், தீ வைத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

