/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக்கல்லூரியில் குடியிருப்புகள் சேதம்
/
மருத்துவக்கல்லூரியில் குடியிருப்புகள் சேதம்
ADDED : நவ 26, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் பேராசிரியர் குடியிருப்பு வளாகங்களில் 4, 5 அறைகளில் வசிக்கும் பேராசிரியர்கள் நவம்பர் 22ல் பணி நிமித்தமாகவும் சொந்த வேலை காரணமாகவும் வெளியூர் சென்றுள்ளனர்.
நவம்பர் 24ல் வந்து பார்த்தபோது குடியிருப்பில் பல்வேறு பகுதிகள் சேதப்படுத்தியும், பொருட்கள் ஆங்காங்கே கிடந்துள்ளது பொருட்கள் திருடு போகவில்லை. சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி இளநிலை நிர்வாக அலுவலர் சிவகுமார் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

