/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப் பாதையில் சேதமடைந்த குவி ஆடி விபத்து அபாயம்
/
குமுளி மலைப் பாதையில் சேதமடைந்த குவி ஆடி விபத்து அபாயம்
குமுளி மலைப் பாதையில் சேதமடைந்த குவி ஆடி விபத்து அபாயம்
குமுளி மலைப் பாதையில் சேதமடைந்த குவி ஆடி விபத்து அபாயம்
ADDED : நவ 18, 2024 07:24 AM

கூடலுார் : குமுளி மலைப் பாதையில் ஆபத்தான வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள குவி ஆடி சேதம் அடைந்துள்ளது.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப் பாதையில் வழிவிடும் முருகன் கோயில், மாதா கோயில், கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் வளைவு ஆகிய பகுதிகள் ஆபத்தான வளைவுகள் ஆகும். இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும்.
இதனை தடுக்கும் வகையில் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் 10க்கும் மேற்பட்ட குவி ஆடிகள் சில மாதங்களுக்கு முன் பொருத்தப்பட்டன.
அவ்வப்போது சேதமடைவதும் பின்னர் சீரமைப்பதுமாக இருந்தனர். தற்போது சபரிமலை உற்ஸவ காலம் துவங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. விபத்து அபாயம் அதிகம் உள்ளது. அதனால் சேதமடைந்து கீழே விழுந்துள்ள குவியாடியை மீண்டும் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன் வர வேண்டும்.