/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் கிடக்கும் மின்கம்பத்தால் அபாயம்
/
ரோட்டில் கிடக்கும் மின்கம்பத்தால் அபாயம்
ADDED : ஜூலை 06, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பஸ்ஸ்டாப் அருகே ரோட்டில் மின்கம்பங்கள் கிடக்கிறது.
இந்த ரோட்டின் வழியாக  வடுகபட்டி, பெரியகுளம்  ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை அணை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மின்வாரியம் மின்கம்பத்தை வாகனங்களுக்கு இடையூறாக ரோட்டில் போட்டுள்ளனர். இதனால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால்  டூவீலரில் செல்பவர்கள் கிழே கிடக்கும்  மின்கம்பத்தில் மோதி விழுகின்றனர். பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் ஜெயமங்கலம் மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பத்தை தூக்கி இடையூறு இல்லாத இடத்திற்கு கொண்டு செல்ல மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

