ADDED : ஜன 09, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினகரன் 24.  இவர் நேற்று முன்தினம் இரவு குப்பிநாயக்கன்பட்டி மெயின் ரோட்டில் நடந்து வந்துள்ளார்.
இவரது நண்பர் அபிஷேக் என்பவரின் சித்தப்பா கரிகாலுடன் குப்பிநாயக்கன் பட்டியை சேர்ந்த சச்சின், ஜெயச்சந்திரன் 28., அருண்குமார் 27., மூவரும் சண்டை போட்டுள்ளனர்.
தினகரன் விலக்கி விட சென்றுள்ளார். ஆத்திரம் அடைந்த மூவரும் தினகரனை சுத்தியலால் அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
தினகரன் புகாரில் போடி டவுன் போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

