/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சியில் வரி செலுத்தாத வீடுகளில் குழாய் இணைப்பு துண்டிக்க முடிவு
/
ஊராட்சியில் வரி செலுத்தாத வீடுகளில் குழாய் இணைப்பு துண்டிக்க முடிவு
ஊராட்சியில் வரி செலுத்தாத வீடுகளில் குழாய் இணைப்பு துண்டிக்க முடிவு
ஊராட்சியில் வரி செலுத்தாத வீடுகளில் குழாய் இணைப்பு துண்டிக்க முடிவு
ADDED : பிப் 08, 2025 05:45 AM
ஆண்டிபட்டி: ஊராட்சிகளில் வரி செலுத்தாத வீட்டு குழாய் இணைப்புகளை துண்டிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரிகள் மூலம் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வரிகள் மூலம் ஊராட்சியில் மக்களுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,துவங்கி டிச.,க்குள் வரி வசூலித்து முடித்து விடுவர். தற்போது பிப்., துவங்கியும் பல ஊராட்சிகளில் வரி வசூல் இலக்கை எட்ட முடியவில்லை. கடந்த காலங்களில் ஊராட்சி நிர்வாகத்தினர் வீடு வீடாகச் சென்று ரசீது கொடுத்து வரி வசூலித்து வந்தனர். தற்போது வரி வசூல் ஆன்லைன் மூலம் இருப்பதால் வரிகளை செலுத்துவதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தவில்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் வரி கேட்டு சென்றாலும் ரசீது கேட்டு, வரி செலுத்தாமல் தட்டிக்கழிக்கின்றனர். வீடு வீடாக நேரில் தெரிவித்தும், தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தும் வரிகளை முழுமையாக வசூலிக்க முடியவில்லை.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: வரி வசூலை நூறு சதவீதம் முடிக்க அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற பணிகள் பாதிப்படைகிறது. வரி வசூல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வதால் பல நேரங்களில் சர்வர் பிரச்னையால் பணம் வாங்கிட்டு ரசீது வழங்க முடியவில்லை. வசூல் பாதிபடைகிறது என்றனர்.