/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகளை துண்டிக்்க முடிவு
/
குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகளை துண்டிக்்க முடிவு
குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகளை துண்டிக்்க முடிவு
குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகளை துண்டிக்்க முடிவு
ADDED : மார் 04, 2024 06:20 AM
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் 15 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. குடிநீர் ஆதாரமாக வைகை அணை, முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்டப் பகுதியில் தற்போது குடிநீர் கட்டணம் ஆண்டிற்கு ரூ. 2832 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இக்கட்டணம் 2020 பிப்., முதல் அமல்படுத்தப்பட்டது. பொது மக்கள் பலர் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் நகராட்சி சார்பில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 10 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

