/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் - கோம்பை ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
/
உத்தமபாளையம் - கோம்பை ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
உத்தமபாளையம் - கோம்பை ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
உத்தமபாளையம் - கோம்பை ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
ADDED : பிப் 18, 2024 01:39 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் ரோட்டில் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது .
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் ரோட்டில் பெரிய ஓடை செல்கிறது. மழை காலங்களில் மலைக்குன்றுகளில் இருந்து வரும் வெள்ள நீர் செல்வதற்கு இந்த ஓடை பயன்படுகிறது. கோம்பை சிக்கச்சியம்மன் கோயில் அருகில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஓடை 2 கி.மீ. தூரம் சென்று, நுகர்பொருள் வாணிப கிட்டங்கு அருகே முடிகிறது.
ஓடையில் 2 கி.மீ. தூரத்திற்கும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. குறிப்பாக கருக் கோடையில் சிலர் ஓடையை மறித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். ஓடை காணாமல் போகும் நிலை உள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த புகாரை தொடர்ந்து உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ராஜா தலைமையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக நுகர்பொருள் வாணிப கிட்டங்கி அருகில் இரு நாட்களுக்கு முன் சில கடைகளை அகற்றினார்கள். தொடர்ந்து ஓடை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்ற திட்டமிட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.