/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; புரோக்கர்கள் பேரத்தில் தீர்வு கிடைக்கும் அவல நிலை
/
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; புரோக்கர்கள் பேரத்தில் தீர்வு கிடைக்கும் அவல நிலை
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; புரோக்கர்கள் பேரத்தில் தீர்வு கிடைக்கும் அவல நிலை
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; புரோக்கர்கள் பேரத்தில் தீர்வு கிடைக்கும் அவல நிலை
ADDED : ஏப் 12, 2025 06:25 AM

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜாதி, இருப்பிடம், வருவாய், பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஏற்படுவதாகவும், புரோக்கர்கள் பேரம் பேசி சான்றிதழ் கிடைப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பத்து, படிவங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் ஜாதி, வருமானம், இருப்பிட சான்றுகள் பெற்று விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.
பெரியகுளம் தாலுகாவில் சான்று பெற விண்ணப்பங்களுடன் உரிய ஆதாரங்களையும் இணைத்து இருந்தாலும் காரணம் இன்றி தள்ளுபடி செய்வது, மனுக்களை கிடப்பில் போடுவது, மனுதாரர்களை அலைகழிப்பு செய்வதும் தொடர்கிறது. விண்ணப்பதாரர்கள் சில அலுவலர்களுக்கு நேரில் சென்று கவனிப்பிற்கு பின் சான்றிதழ்கள் பெறும் நிலை உள்ளது. பெரும்பாலும் பட்டா பெயர் மாறுதல், கூட்டுப்பட்டாக்களில் இந்த நிலை உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்கள், பொதுமக்களுக்கு 16 நாட்களில் தீர்வு கண்டு, சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
நீண்ட நாள் நிலுவையில் இல்லாததை உறுதி செய்யவும், காரணமின்றி தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
தொடர் தாமதம்: பெரியகுளம் தாலுகாவில் பெரியகுளம், தேவதானப்பட்டி இரு வருவாய் அலுவலகமும், 18 வி.ஏ.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இசேவை மையங்களில் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கப்படுகின்றன. சில வி.ஏ.ஓ.,க்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தீர்வு காண்பதில் தாமதம் செய்கின்றனர். இவர்கள் விண்ணப்பங்களை நிராகரித்து, ஆர்.ஐ.,க்கு பரிந்துரை செய்கின்றனர். வி.ஏ.ஓ., நிராகரிப்பு காரணத்தை ஆர்.ஐ.,யும் கண்டறியாமல் நிராகரிக்கின்றனர்.தாலுகா அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை புரோக்கர்கள் பேரம் பேசி முடித்து கொடுக்கின்றனர்.
முந்தைய ஆர்.டி.ஓ., முத்துமாதவன் வாரம் ஒரு முறை விண்ணப்பங்கள் நிராகரிப்பு காரணங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்ததால் சான்றிதழ் தாமதம் இன்றி கிடைத்தது. இதே போல் சப்- கலெக்டர் ரஜத்பீடன் தாலுகா அலுவலகம் வந்து செல்ல வேண்டும்.
அலைக்கழிப்பு
பாபு, பெரியகுளம்: தாலுகா அலுவலகத்தில் விண்ணபித்த 16 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைப்பதில்லை. சான்றிதழ் பெற ஒரு மாதத்திற்கு மேலாகிறது. தேவையில்லாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் அலைக்கழிப்பு செய்கின்றனர். தாமதம் இன்றி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.-