sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நடுக்கோட்டை -- ஏ.வாடிப்பட்டி பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்; இரு மாவட்டங்களை இணைக்கும் பாலம் முடங்கியுள்ள அவலம்

/

நடுக்கோட்டை -- ஏ.வாடிப்பட்டி பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்; இரு மாவட்டங்களை இணைக்கும் பாலம் முடங்கியுள்ள அவலம்

நடுக்கோட்டை -- ஏ.வாடிப்பட்டி பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்; இரு மாவட்டங்களை இணைக்கும் பாலம் முடங்கியுள்ள அவலம்

நடுக்கோட்டை -- ஏ.வாடிப்பட்டி பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்; இரு மாவட்டங்களை இணைக்கும் பாலம் முடங்கியுள்ள அவலம்


ADDED : மே 04, 2025 05:30 AM

Google News

ADDED : மே 04, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் நடுகோட்டை, பெரியகுளம் ஒன்றியம் ஏ.வாடிப்பட்டி கிராமங்களை இணைக்க வைகை ஆற்றின் குறுக்கே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.8.5 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் பணி முடிந்து 10 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான் கோம்பை வழியாக வத்தலக்குண்டு செல்ல ரோடு வசதி உள்ளது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களை இணைக்கும் இந்த வழித்தடம் வழியாக வத்தலகுண்டு, தேனி, பெரியகுளம், உசிலம்பட்டி டெப்போக்கள் மூலம் 7 அரசு டவுன் பஸ்கள் 25க்கும் மேற்பட்ட முறை இயக்கப்படுகிறது. இரு மாவட்டங்களை இணைப்பதால் இந்த வழித்தடத்தில் எந்நேரமும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் துறை அலுவலர்கள் இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்களில் அதிகம் பயணிக்கின்றனர். பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் பல இடங்களில் ரோடுகள் குறுகலாக இருப்பதால் போக்குவரத்தில் அன்றாடம் வாகனங்கள் சிரமங்களை சந்திக்கின்றன. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும் பயண தூரத்தை குறைக்கவும் நடுக்கோட்டை அருகே வைகை ஆற்றின் குறுக்கே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.8.5 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணி முடிந்து 10 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

பொதுமக்கள் கூறியதாவது:

புதிய பாலத்தால் 4 கி.மீ., துாரம் குறையும்

காட்டமுத்து, நடுக்கோட்டை:

ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்லும் வாகனங்கள் டி.அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை, காமாட்சிபுரம், ரங்கப்பநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, நான்கு ரோடு, குரும்பபட்டி வழியாக வத்தலகுண்டு செல்கிறது. இப்பகுதி கிராமங்களில் ரோடு பல இடங்களில் குறுகலாக உள்ளது. எதிரெதிர் வாகனங்கள் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து துவங்கினால் நடுக்கோட்டையில் இருந்து ஏ.வாடிப்பட்டி, கருப்பமூப்பன்பட்டி, விராலிபட்டி வழியாக வத்தலகுண்டு செல்ல முடியும். மாற்று வழித்தடமாக நடுக்கோட்டை, ஏ.வாடிப்பட்டி, ரெங்கநாதபுரம், எழுவனம்பட்டி, செங்குளம் வழியாக பைபாஸ் ரோட்டில் இருந்து வத்தலகுண்டு அல்லது பெரியகுளத்திற்கு எளிதில் செல்ல முடியும். ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்ல 4 கி.மீ., தூரமும் குறையும். புதிய பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளை பொருட்களை

எளிதில் சந்தைப்படுத்தலாம்

சுரேஷ், ஆட்டோ டிரைவர், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இருந்து வைகை அணை, குள்ளப்புரம், மறுகால்பட்டி, புதூர் வழியாக ஏ.வாடிப்பட்டிக்கு 20 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. நடுக்கோட்டை புதிய பாலம் வழியாக சென்றால் ஆண்டிபட்டியில் இருந்த 12 கி.மீ., தூரத்தில் ஏ.வாடிப்பட்டி செல்ல முடியும். பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் தனியார் வாகனங்களும் வத்தலக்குண்டு செல்ல எளிதாகும். விவசாயிகள் விளை பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். தற்போது வத்தலகுண்டு செல்லும் வழித்தடத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர முடியவில்லை. போக்குவரத்திற்கு தக்கபடி பல இடங்களில் ரோடு விரிவாக்கமும் இல்லை. இதனால் பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது புதிய பாலம் வழியாக போக்குவரத்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்வு

இணைப்பு ரோடுவசதி அவசியம்

புள்ளிமான்கோம்பை ரோட்டில் இருந்து புதிய பாலம் வரை இணைப்பு ரோடு வசதி இன்னும் இல்லை. பாலத்தின் மறுபுறம் நடுக்கோட்டைக்கும் இணைப்பு ரோடு இல்லை. இப்பகுதியில் உள்ள வைகை பாசனக்கால்வாய் பாலம், சாக்கடைப்பாலம் பலம் இழந்த நிலையில் உள்ளது. பலமிழந்த பாலத்தை அகற்றி புதிய பாலம், இணைப்பு ரோடு வசதி ஏற்படுத்தினால் மட்டுமே புதிய பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். இரு மாவட்டங்களுக்கு இணைப்பாக உள்ள இந்த வழித்தடத்தில் கூடுதல் வசதி செய்ய வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ., க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us