/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் குமுளி பஸ்ஸ்டாண்ட் திறப்பில் சிக்கல் - கட்டுமானப் பணிகள் முடிந்தும் காத்திருப்பு

ADDED : செப் 23, 2025 04:48 AM

கூடலுார்: குமுளி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி முடிவடைந்தும் மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் திறப்பு விழா காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குமுளியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வந்தது. தமிழக கேரள எல்லையாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். அருகில் தேக்கடி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிகமாக இவ்வழியாக வருகின்றன. மேலும் சபரிமலை உற்ஸவ காலங்களில் பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக வரும். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.
இந்நிலையில் போக்குவரத்துக் கழக டெப்போ அமைந்திருந்த பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2023 செப். 11ல் பூமி பூஜை நடத்தப்பட்டது. ஓராண்டிற்குள் பணிகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. 18 கடைகள், 11 பயணிகள் தங்கும் அறை, 2 நவீன கழிப்பறைகள், உணவு விடுதி, ஓட்டுநர் நடத்துனர்களுக்கு ஓய்வு அறை என பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி முடிவடைந்தது.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் மின் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் திறப்பு விழா காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை உற்சவ விழா துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ளதால் விரைவில் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.