/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதையில்லா திராட்சை வரத்து தாமதம் பன்னீர் திராட்சைக்கு தட்டுப்பாடு
/
விதையில்லா திராட்சை வரத்து தாமதம் பன்னீர் திராட்சைக்கு தட்டுப்பாடு
விதையில்லா திராட்சை வரத்து தாமதம் பன்னீர் திராட்சைக்கு தட்டுப்பாடு
விதையில்லா திராட்சை வரத்து தாமதம் பன்னீர் திராட்சைக்கு தட்டுப்பாடு
ADDED : டிச 19, 2025 05:34 AM
கம்பம்: விதையில்லா திராட்சை வரத்து தாமதமாகி வரும் நிலையில் பன்னீர் திராட்சையும் வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு திருப்தியான விலை கிடைத்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் பரவலாக பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதியாகும். ஆண்டிற்கு 3 அறுவடை செய்கின்றனர்.
டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து விதையில்லா திராட்சை தமிழக மார்க்கெட்டை ஆக்கிரமிக்கும். மஹாராஷ்டிராவில் சாகுபடியாகும் விதையில்லா திராட்சை டிசம்பர் மாதம் துவங்கி மே மாதம் வரை ஆறு மாதங்களுக்கு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும். அந்த காலங்களில் கம்பம் பள்ளத்தாக்கு பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்காது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக தோட்டங்களில் பழம் இல்லை. எனவே வரத்து குறைவாக உள்ளது. கிலோ ரூ.50 வரை கிடைக்கிறது.
ஆனால் இந்த காலத்தில் வந்திருக்க வேண்டிய விதையில்லா திராட்சை இன்னமும் வரவில்லை. மஹாராஷ்டிராவில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், விதையில்லா திராட்சை வரத்து கால தாமதமாகிறது. டிச., நான்காவது வாரம் துவங்க இருப்பதாலும், விதையில்லா திராட்சை வராததாலும் பன்னீர் திராட்சைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.இது தொடர்பாக திராட்சை விவசாயி முகுந்தன் கூறுகையில், 'மஹாராஷ்டிராவில் கவாத்து பணி தமாதமாக நடந்ததால் விதையில்லா திராட்சை வரத்து தாமதமாகிறது. ஜனவரியில் வரத்து துவங்கி விடும். அதுவரை பன்னீர் திராட்சைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது,' என்றார்.

