/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை
/
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 08, 2024 05:08 AM

கூடலுார், : மழை பெய்தவுடன் கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரையுள்ள 4 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பட்டதாகும். சமீபத்தில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. விபத்துக்கள் நடக்காமல் தடுக்க சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரோட்டில் இரு பகுதிகளிலும் மழை நீர் வெளியேறும் வகையில் முறையான கழிவு நீரோடை அமைக்காமல் பணிகள் நடந்ததால் சிறிய மழை பெய்தால்கூட நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கி விடுகிறது. கருணாநிதி காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, காய்கறி மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறாததால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பல இடங்களில் பணிகள் முழுமை அடையாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. முழுமையாக ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை. ரோடு சேதம் அடைவதற்கு முன் மழை நீர் தேங்காமல் வெளியேற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.