/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாசன வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க கோரிக்கை
/
பாசன வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க கோரிக்கை
பாசன வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க கோரிக்கை
பாசன வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க கோரிக்கை
ADDED : செப் 29, 2024 05:42 AM
சின்னமனூர் : பாசன வாய்க்காலில் குப்பை கொட்டி மாசு படுத்துவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இரு போக நெல் சாகுபடி 17 வாய்க்கால்கள் மூலம் நடைபெறுகிறது. இது தவிர 5100 ஏக்கர் ஒரு போக நெல் சாகுபடி பி.டி.ஆர்., வாய்க்கால் மூலம் நடைபெறுகிறது. பி.டி.ஆர்.,வாய்க்கால் வாய்க்கால்பட்டியில் துவங்கி சின்னமனூர், சீலையம்பட்டி வழியாக வேப்பம்பட்டி, கோட்டூர், தர்மாபுரி, தப்புக் குண்டு, தாடிச்சேரி வழியாக அரண்மனைபுதூர் வரை செல்கிறது.
இந்த வாய்க்கால் சின்னமனுாருக்குள் வரும் போது, காந்திநகர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் இரு பக்க கரைகளில் வசிப்பவர்கள் குப்பையை கொட்டுகின்றனர்.
சாக்கடை கழிவு நீர், செப்டிக்டேங்க் கழிவுகள் போன்றவற்றை வாய்க்காலில் கலக்கின்றனர்.
சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு பாசன வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறுகிறது. இதனால் இந்த வீதியில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
சுற்றுப்புறச்சூழல் மாசு படுகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை வாய்க்காலை காப்பாற்ற முன்வர வேண்டும்.
வாய்க்காலுக்குள் விடப்படும் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். இரண்டு கரைகளிலும் தடுப்பு சுவர் உயரமாக எழுப்பி பாசன வாய்க்காலை பாதுகாக்க முன்வர வேண்டும்.