/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2024 06:43 AM
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் அமைப்பாளர் சரவணமுத்து, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி தலைமை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் முகமது அலிஜின்னா, மாவட்ட அமைப்பாளர் சென்னமராஜ், அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் கார்த்திகேய வெங்கடேசன், மாவட்ட தலைவர் குபேந்திரசெல்வம், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட கவுரத் தலைவர் முத்தழகு, தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் நக்கீரன், சிவக்குமார், கருவூல கணக்குத்துறை மாவட்ட நிர்வாகி மீராமைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.