ADDED : மார் 12, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி எஸ்.பி.ஐ., வங்கி எதிரே சி.பி.எம்., சார்பில்,' தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை நிதி பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்களையும், நிதி அளித்தவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ., வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், விபரங்களை அளிக்காமல் காலதாமதப்படுத்தும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து' ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை வகித்தார்.
தாலுகா குழு செயலாளர் தர்மர் துவக்க உரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் சண்முகம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் துரைராஜ், கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர்கள் பொன்னுத்துரை, வீரமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர்.
தாலுகா குழு உறுப்பினர் முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.

